عربيEnglish

مريم ابنت عمران عليها السلام موسوعة القرآن الكريم

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Chargers [Al-Adiyat] - Tamil translation - Omar Sharif

Surah The Chargers [Al-Adiyat] Ayah 11 Location Maccah Number 100

பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,

இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

ஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.

ஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.

நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.

இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்.

நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.

புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.