عربيEnglish

مريم ابنت عمران عليها السلام موسوعة القرآن الكريم

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The earthquake [Al-Zalzala] - Tamil Translation - Omar Sharif - Abridged Version

Surah The earthquake [Al-Zalzala] Ayah 8 Location Madanah Number 99

பூமி அதன் நிலநடுக்கத்தால் நடுங்க வைக்கப்படும் போது,

இன்னும் பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும் (போது),

இன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.

அந்நாளில் அது (-பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.

அதாவது, உம் இறைவன் தனக்கு கட்டளையிட்டான் என்று.

அந்நாளில் மக்கள் பல பிரிவு களாகப் புறப்படுவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பதற்காக.

ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ, (அங்கு) அதைப்பார்ப்பார்.

யார் ஓர் அணுவளவு தீமை செய்வாரோ, (அங்கு) அதைப் பார்ப்பார்.