التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [آل عمران]

۞إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துவானவர்களை அவருக்குச்சிரம்பணியுமாறு செய்தான்நூஹைத் தேர்ந்தேடுத்து பூமியில் அனுப்பப்படும் முதல்தூதராக ஆக்கினான்இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான்அவரதுசந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான்இம்ரானின் குடும்பத்தினரையும்தேர்ந்தெடுத்தான்அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்துஅவர்களதுகாலங்களில் வாழ்ந்த மக்களுக்கு மத்தியில் அவர்களை மேன்மைப்படுத்தினான்.

ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

التاميلية | தமிழ்

மேலே கூறப்பட்ட தூதர்களும்அவர்களின் வழியைப் பின்பற்றிய அவர்களின்சந்ததிகளும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதில்நற்செயல்கள் புரிவதில் ஒருவர்மற்றவரைச் சார்ந்தவர்கள் தாம்அவர்கள் நற்குணத்தையும்சிறப்புகளையும் ஒருவர்மற்றவரிடமிருந்து பெற்றார்கள்அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதைசெவியேற்கக்கூடியவன்அவர்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன்அதனால்தான் அவர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான்.

إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

التاميلية | தமிழ்

தூதரேமர்யம் (அலை) அவர்களின் தாயாகிய இம்ரானின் மனைவி “என் இறைவாவேறு எதுவும் செய்யாது உனக்கும்உன் வீட்டிற்கும் பணிவிடை செய்வதற்காகவே என்வயிற்றிலுள்ள சிசுவை உனக்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன்எனவேஎன்னிடமிருந்து எனது இந்தச் செயலை ஏற்றுக் கொள்வாயாகநிச்சயமாக நீபிரார்த்தனையைச் செவியேற்கக்கூடியவன்என் எண்ணத்தை நன்கறிந்தவன்” எனக்கூறியதை நினைவு கூர்வீராக.

فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّيسَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

التاميلية | தமிழ்

கர்ப்ப காலம் நிறைவடைந்தபோதுஅவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள்(அவள் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்தாள்) அப்போது அவள் “என் இறைவாநான் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே! என்றாள்அவள் என்னகுழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்எதிர்பார்த்தஆண் ஆற்றலிலும்தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல“நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன்உன் அருளை விட்டும் விரட்டப்பட்டஷைத்தானிடமிருந்து நான் இக்குழந்தைக்கும்இக்குழந்தையின் சந்ததிகளுக்கும்உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَعِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ

التاميلية | தமிழ்

அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்அந்தக்குழந்தையை நல்ல முறையில் வளரச் செய்தான்அவனது நல்லடியார்களின்உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச் செய்தான்மர்யமுக்கு ஸகரிய்யா(அலை) அவர்களை பொறுப்பாளராக்கினான்ஸகரிய்யா (அலை) மர்யமின்வணக்கஸ்தலத்திற்குச் செல்லும் போதெல்லாம் அங்கு இலகுவாகக் கிடைத்ததூய்மையான உணவைக் காண்பார்அவளிடம் “மர்யமே இந்த உணவு உனக்குஎங்கிருந்து கிடைத்தது? எனக் கேட்பார்அதற்கு மர்யம் “இது அல்லாஹ்விடமிருந்துகிடைத்த உணவாகும்அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாகவழங்குகிறான். எனக் கூறுவாள்.

وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَـٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

தூதரேவானவர்கள் மர்யமிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக“உம்முடைய நல்ல பண்புகளின் காரணமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்துகுறைகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்தியுள்ளான்உம் காலத்தில் வாழும்உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் அல்லாஹ் உம்மைச் சிறப்பித்துள்ளான்.

يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّـٰكِعِينَ

التاميلية | தமிழ்

மர்யமேநீண்ட நேரம் நின்று தொழுவீராகஉம் இறைவனுக்காக சிரம்பணிவீராகஅவனைக் குனிந்து வணங்கும் நல்லடியார்களுடன் சேர்ந்து நீரும் குனிந்துவணங்குவீராக.

ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَلَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ

التاميلية | தமிழ்

தூதரேமேலே கூறப்பட்ட ஸகரிய்யா மற்றும் மர்யமைப் பற்றிய செய்திகள் மறைவானசெய்திகளாகும்நாமே இவற்றை உமக்கு அறிவிக்கின்றோம்மர்யமை யார்பராமரிப்பதுஎன்ற விஷயத்தில் ஏற்பட்ட போட்டியால் அவர்களிலுள்ள அறிஞர்களும்நல்லவர்களும் சீட்டுக் குலுக்கி அவர்களது எழுதுகோல்களைப் போட்டபோது நீர்அவர்களுடன் இருக்கவில்லைசீட்டு குலுக்கிப் போடப்பட்ட போது ஸகரிய்யாவின்எழுதுகோலே வென்றது.

إِذۡ قَالَتِ ٱلۡمَلَـٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِيٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ

التاميلية | தமிழ்

தூதரேபின்வரும் சம்பவத்தையும் நினைவு கூர்வீராகவானவர்கள் மர்யமிடம்“அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான்அவர்தந்தையின்றிஅல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’ ‘ஆகிவிடு’ என்பதைக் கொண்டுபடைக்கப்படுவார்அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம் ஆகும்அவர் இவ்வுலகிலும்மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார்அல்லாஹ்வுக்குநெருக்கமானவராக இருப்பார்” என்று கூறினார்கள்.

وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّـٰلِحِينَ

التاميلية | தமிழ்

பேசும் பருவத்தை அடையாத சிறு குழந்தையாக இருக்கும் போதே அவர் மக்களிடம்பேசுவார்முழுமையான பலத்தையும்ஆண்மையையும் பெற்று அவர் பெரியவரானபிறகும் மக்களிடம் பேசுவார்அவர்களின் உலக மற்றும் மார்க்க விஷயங்களில்நன்மையானவற்றை அவர்களுக்குக் கூறுவார்சொல்லிலும்செயலிலும்நல்லவராகவும் இருப்பார்.

قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَايَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

التاميلية | தமிழ்

கணவனின்றி தனக்குக் குழந்தை பிறப்பதை ஆச்சரியமாகக் கருதிய மர்யம் “எனக்குஎவ்வாறு குழந்தை பிறக்கும்என்னை எந்த ஆணும் முறையாகவோதவறாகவோநெருங்கியதில்லையே? எனக் கேட்டார்வானவர் “தந்தையின்றி உங்களுக்குகுழந்தையை அவன் தந்தது போன்றேதான் ஏற்படுத்திய வழக்கத்திற்கு மாறாக தான்நாடியதைப் படைக்கிறான்அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ‘குன்’(ஆகிவிடு) என்றுதான் கூறுவான்அது ஆகிவிடும்அவனை எதுவும்இயலாமலாக்காது” என்று கூறினார்.

وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ

التاميلية | தமிழ்

அவன் அவருக்கு எழுத்தையும்சொல்லிலும்செயலிலும் நேர்த்தியையும் கற்றுக்கொடுப்பான்மூஸா (அலை) அவர்களின் மீது இறக்கிய தவ்ராத்தையும்அவர் மீதுஇறக்கப்போகின்ற இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.