وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦوَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ
التاميلية | தமிழ்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்குஅவன் இம்ரானின் மகள் மர்யமின் நிலமையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் தம்கற்பை விபச்சாரத்திலிருந்து பேணிக்கொண்டாள். அல்லாஹ் ஜிப்ரீலை மர்யமுள்ஊதுமாறு கட்டளையிட்டான். எனவே அல்லாஹ்வின் வல்லமையால் மர்யம்தந்தையின்றி ஈஸாவைக் கருவுற்றாள். மர்யம் அல்லாஹ்வின் ஷரீஅத்துகளையும், அவன் தன் தூதர்கள் மீது இறக்கிய வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். அவர்அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்துவிலகி, அவனுக்குக் கீழ்ப்படிபவர்களில் ஒருவராக இருந்தாள்.