التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [المائدة]

لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَايَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

التاميلية | தமிழ்

“அல்மஸீஹ்” எனப்படும் ‘மர்யமின் மகன் ஈஸா தான் இறைவன்’ என்று கூறியகிறிஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள்தூதரேஅவர்களிடம் “ஈஸாவையும்அவருடைய அன்னையையும்பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்கநாடிவிட்டால்யாரால் அதனைத் தடுக்க முடியும்எனக் கேட்பீராகஅவனைத்தடுப்பதற்கு சக்தி பெறமாட்டார் என்றால் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன்வேறு யாருமில்லைமர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும்பூமியிலுள்ளஅனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள் தாம் என்பதற்கான சான்றாகும்வானங்கள்பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம்அல்லாஹ்வுக்கே உரியதுஅவன் தான் நாடியதை படைக்கிறான்அவ்வாறு அவன்படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள்அவர் அல்லாஹ்வின்தூதரும் அடியாரும் ஆவார்அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.

مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡكَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ

التاميلية | தமிழ்

மர்யமின் மகன் ஈஸா தூதர்களில் ஒரு தூதர் மாத்திரமேஅவர்கள் மரணித்ததுபோலவே இவரும் மரணிப்பவரேஅவரது தாய் மர்யம் அதிகமாக உண்மையுரைக்கும்உண்மைப்படுத்தும் பெண்மணியாக இருந்தார்இருவருக்கும் உணவுத் தேவைஇருப்பதனால்இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள்உணவுத் தேவைஉள்ளவர்கள் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்தூதரேஏகத்துவத்தைஅறிவிக்கக்கூடியஅல்லாஹ் அல்லாதவர்களுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கும்அவர்களின் எல்லை மீறல் தவறு என நிரூபிக்கக்கூடியஅத்தாட்சிகளை எவ்வாறுதெளிவுபடுத்துகின்றோம் என்பதை கவனமாகப் பார்ப்பீராகஇருந்தும் அவர்கள் இந்தஅத்தாட்சிகளை மறுக்கத்தான் செய்கிறார்கள்அல்லாஹ் ஒருவனே என்பதைஅறிவிக்கக்கூடிய தெளிவான அத்தாட்சிகளை அவர்கள் கண்ட பின்னரும் எவ்வாறுஅவர்கள் சத்தியத்தை விட்டும் திருப்பப்படுகிறார்கள்என்பதையும் கவனித்துப்பார்ப்பீராக.

إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَفِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِبِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡكَفَفۡتُ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ

التاميلية | தமிழ்

அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தைநினைவுகூர்வீராக“மர்யமின் மகன் ஈஸாவே!, நான் உம்மை தந்தையின்றிபடைத்தபோதுஉம் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராகஉமதுதாய் மர்யம் (அலை)  அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்தஅருளையும் நினைவுகூர்வீராகஜிப்ரீல் (அலை) அவர்களைக் கொண்டு நாம் உம்மைவலுப்படுத்தியபோது (நீர் கைக்குழந்தையாக இருந்த போது) மக்களை அல்லாஹ்வின்பக்கம் அழைத்து உரையாடினீர்மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கியதூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர்உமக்கு எழுதவும் மூஸாவுக்குஇறக்கிய தவ்ராத்உம்மீது இறக்கிய இன்ஜீல்மார்க்க சட்டங்களின்இரகசியங்களையும்பயன்களையும்நோக்கங்களையும் நான் உமக்குக் கற்பித்ததும்நான் உமக்களித்த அருட்கொடைகளேமேலும் நாம் உமக்களித்த அருட்கொடைகளில்ஒன்றுநீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில்ஊதியதும் அது பறவையாயிற்றுநீர் பிறவிக் குருடனை குருட்டுத் தன்மையிலிருந்துகுணப்படுத்துகிறீர்தொழு நோயாளியையும் குணப்படுத்துகிறீர்அதனால் அவர்ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார்உயிர்ப்பிக்குமாறுஅல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர்இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும்நாம் உமக்கு அளித்தஅருட்கொடைகளில் ஒன்றுநீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது“ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்றுகூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோதுநாம்உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.

وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَمَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِينَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلۡغُيُوبِ

التاميلية | தமிழ்

மறுமை நாளில் மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸாவிடம்“மர்யமின் மகன்ஈஸாவே“அல்லாஹ்வை விட்டுவிட்டு என்னையும் என் தாயையும்வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா? எனஅல்லாஹ் கேட்பதை நினைத்துப் பார்ப்பீராகஅதற்கு ஈஸா தம் இறைவனின்தூய்மையை உறுதிப்படுத்தியவராக “சத்தியத்தைத் தவிர வேறு எதைக் கூறுவதற்கும்எனக்கு உரிமை இல்லைநான் அவ்வாறு கூறியிருந்தால்நீ அதனை அறிந்திருப்பாய்ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லைநான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய்உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன்நீமட்டுமே வெளிப்படையானதையும்மறைவானதையும் நன்கறிந்தவன்” எனக்கூறுவார்.