وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا
التاميلية | தமிழ்
தூதரே! உமக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு, தனித்து, தூரமாகி, கிழக்குத் திசையிலுள்ளஓரிடத்திற்குச் சென்றுவிட்டார்.
فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا
التاميلية | தமிழ்
தான் இறைவனை வணங்கும்போது, தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலைஅனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால்தோன்றினார். நிச்சயமாக அவர் தம்மிடம் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணி, மர்யம் பயந்துவிட்டார்.
قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا
التاميلية | தமிழ்
மர்யம் குறைகளற்ற மனித உருவில் அவர் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது, “மனிதா! நீ அல்லாஹ்வைப் பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால், நான் உம்மால்ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்”என்பதாகக் கூறினார்.
قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا
التاميلية | தமிழ்
“நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்குதூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னைஉங்களிடம் அனுப்பியுள்ளான்” என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا
التاميلية | தமிழ்
மர்யம் ஆச்சரியமாக “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோஎன்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும்அல்லவே! எனக் கூறினார்.
قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا
التاميلية | தமிழ்
ஜிப்ரீல் அவரிடம் “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத்தீண்டியதுமில்லை. நீர் விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால், தந்தையின்றிஒரு குழந்தையைப் பிறக்க வைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனைமக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும், உமக்கும் அவரைநம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கின்றோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும் என உம் இறைவன் கூறுகிறான்”என்பதாகக் கூறினார்.
۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا
التاميلية | தமிழ்
வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அவள் அதனை எடுத்துக்கொண்டுமக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا
التاميلية | தமிழ்
பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின் பால் கொண்டு சென்றது. “நான்இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றிதவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவு கூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்கவேண்டுமே!“ என்பதாக மர்யம் கூறினாள்.
فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا
التاميلية | தமிழ்
மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து ஈஸா மர்யமை அழைத்து “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர்பருகலாம்” என்பதாகக் கூறினார்.
وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا
التاميلية | தமிழ்
நீ பேரீச்சைத் தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதியபேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும்.
فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَٱلۡيَوۡمَ إِنسِيّٗا
التاميلية | தமிழ்
பேரீச்சம் பழங்களை உண்டு நீரை அருந்துவீராக. உமது குழந்தையைக் கொண்டுமகிழ்ச்சியடைவீராக. கவலைப்படாதீர். மக்களில் யாரையேனும் சந்திக்க நேரிட்டுகுழந்தையைக் குறித்து உம்மிடம் கேட்டால், “ என் இறைவனுக்காக நான் யாருடனும்பேசாமல் மௌன விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்று நான் மக்களில் யாரோடும்பேச மாட்டேன்” என்று கூறுவீராக.
فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا
التاميلية | தமிழ்
மர்யம் தம் மகனை சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவருடையசமூகத்தார் அவரிடம் வெறுப்போடு “மர்யமே! நீ பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாயே! தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துவிட்டாயே!” என்றனர்.
يَـٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا
التاميلية | தமிழ்
“வணக்க வழிபாட்டில் ஹாரூனைப் போன்றவளே! (அவர் நல்ல மனிதர்) உன்தந்தையும், தாயும் விபச்சாரம் செய்வோராக இருக்கவில்லை! நீ தூய்மையானநற்பெயருள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாயிற்றே! எவ்வாறு தந்தையின்றிஒரு குழந்தையைக் கொண்டு வந்துள்ளாய்?“
فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا
التاميلية | தமிழ்
அவர் தொட்டிலில் இருந்த தம் மகன் ஈஸாவின் பால் சுட்டிக் காட்டினார். அதற்குஅவர்கள் ஆச்சரியமாக “தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறுபேசுவது?” என்று கேட்டனர்.
قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا
التاميلية | தமிழ்
ஈஸா (அலை) அவர்கள் “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியாராவேன். அவன்எனக்கு இன்ஜீலை வழங்கி என்னை அவனின் நபிமார்களில் ஒருவராகவும்ஆக்கியுள்ளான்” எனக் கூறினார்.
وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا
التاميلية | தமிழ்
“நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராகஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும் படியும், ஸகாத்தை வழங்கும் படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்”
وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا
التاميلية | தமிழ்
“என் தாய்க்கு நன்மை செய்யக்கூடியவனாக என்னை ஆக்கியுள்ளான். என்இறைவனுக்குக் கட்டுப்படாத கர்வம் கொண்டவனாக, அவனுடைய கட்டளைக்குமாறாகச் செயல்படக்கூடியவனாக அவன் என்னை ஆக்கவில்லை”.
وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا
التاميلية | தமிழ்
“நான் பிறந்த நாளிலும், மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுஎழுப்பப்படும் மறுமை நாளிலும் ஷைத்தானை விட்டும், அவனுடைய உதவியாளர்களைவிட்டும் என் இறைவன் என்னைப் பாதுகாத்துள்ளான். இந்த மூன்று கடினமானசூழ்நிலைகளிலும் ஷைத்தான் என்னைத் தீண்டவில்லை”.
ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ
التاميلية | தமிழ்
இப்பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர் தான் மர்யமின் மகன் ஈஸா ஆவார். இதுதான்அவருடைய விடயத்தில் உண்மையான தகவலாகும். அவருடைய விடயத்தில் சந்தேகம்கொண்டு, முரண்பட்டு, வழிகெட்டவர்கள் கூறும் விடயம் எதுவும் உண்மையற்றவை.
مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
التاميلية | தமிழ்
மகனை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமற்றது. அவன் அதனைவிட்டும் தூய்மையானவன். அவன் ஏதேனும் ஒன்றை நாடினால், அவ்விடயத்தில் ‘ஆகு’என்று கூறி போதுமாக்கிக் கொள்வான். நிச்சயமாக அது ஆகிவிடும். அதில்சந்தேகமில்லை. அவ்வாறானவன் பிள்ளையை விட்டும் பரிசுத்தமானவன்.