التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [المؤمنون]

وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ

التاميلية | தமிழ்

ஈஸாவையும் அவரது தாய் மர்யமையும் நம்முடைய வல்லமையை அறிவிக்கும்சான்றாக ஆக்கினோம். அவள் தந்தையின்றி ஈஸாவை வயிற்றில் சுமந்தாள். நாம்பூமியின் உயரமான இடத்தில் அவர்கள் இருவரையும் ஒதுங்கவைத்தோம். அதுவசிப்பதற்கு உகந்த தரைமட்டமான தொடராக ஓடும் நீருள்ள இடமாக இருந்தது.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [الأنبياء]

وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

தூதரே! விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின்சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பிஅவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத்தந்தையின்றிப் படைத்ததனால் அவளும், அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின்வல்லமைக்கும், அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்குசான்றாக இருந்தனர்.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [مريم]

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا

التاميلية | தமிழ்

தூதரே! உமக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு, தனித்து, தூரமாகி, கிழக்குத் திசையிலுள்ளஓரிடத்திற்குச் சென்றுவிட்டார்.

فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا

التاميلية | தமிழ்

தான் இறைவனை வணங்கும்போது, தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலைஅனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால்தோன்றினார். நிச்சயமாக அவர் தம்மிடம் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணி, மர்யம் பயந்துவிட்டார்.

قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا

التاميلية | தமிழ்

மர்யம் குறைகளற்ற மனித உருவில் அவர் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது, “மனிதா! நீ அல்லாஹ்வைப் பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால், நான் உம்மால்ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்”என்பதாகக் கூறினார்.

قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا

التاميلية | தமிழ்

“நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்குதூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னைஉங்களிடம் அனுப்பியுள்ளான்” என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.

قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا

التاميلية | தமிழ்

மர்யம் ஆச்சரியமாக “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோஎன்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும்அல்லவே! எனக் கூறினார்.

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا

التاميلية | தமிழ்

ஜிப்ரீல் அவரிடம் “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத்தீண்டியதுமில்லை. நீர் விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால், தந்தையின்றிஒரு குழந்தையைப் பிறக்க வைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனைமக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும், உமக்கும் அவரைநம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கின்றோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும் என உம் இறைவன் கூறுகிறான்”என்பதாகக் கூறினார்.

۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا

التاميلية | தமிழ்

வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அவள் அதனை எடுத்துக்கொண்டுமக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள்.

فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا

التاميلية | தமிழ்

பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின் பால் கொண்டு சென்றது. “நான்இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றிதவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவு கூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்கவேண்டுமே!“ என்பதாக மர்யம் கூறினாள்.

فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا

التاميلية | தமிழ்

மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து ஈஸா மர்யமை அழைத்து “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர்பருகலாம்” என்பதாகக் கூறினார்.

وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا

التاميلية | தமிழ்

நீ பேரீச்சைத் தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதியபேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும்.

فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَٱلۡيَوۡمَ إِنسِيّٗا

التاميلية | தமிழ்

பேரீச்சம் பழங்களை உண்டு நீரை அருந்துவீராக. உமது குழந்தையைக் கொண்டுமகிழ்ச்சியடைவீராக. கவலைப்படாதீர். மக்களில் யாரையேனும் சந்திக்க நேரிட்டுகுழந்தையைக் குறித்து உம்மிடம் கேட்டால், “ என் இறைவனுக்காக நான் யாருடனும்பேசாமல் மௌன விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்று நான் மக்களில் யாரோடும்பேச மாட்டேன்” என்று கூறுவீராக.

فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا

التاميلية | தமிழ்

மர்யம் தம் மகனை சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவருடையசமூகத்தார் அவரிடம் வெறுப்போடு “மர்யமே! நீ பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாயே! தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துவிட்டாயே!” என்றனர்.

يَـٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا

التاميلية | தமிழ்

“வணக்க வழிபாட்டில் ஹாரூனைப் போன்றவளே! (அவர் நல்ல மனிதர்) உன்தந்தையும், தாயும் விபச்சாரம் செய்வோராக இருக்கவில்லை! நீ தூய்மையானநற்பெயருள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாயிற்றே! எவ்வாறு தந்தையின்றிஒரு குழந்தையைக் கொண்டு வந்துள்ளாய்?“

فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا

التاميلية | தமிழ்

அவர் தொட்டிலில் இருந்த தம் மகன் ஈஸாவின் பால் சுட்டிக் காட்டினார். அதற்குஅவர்கள் ஆச்சரியமாக “தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறுபேசுவது?” என்று கேட்டனர்.

قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا

التاميلية | தமிழ்

ஈஸா (அலை) அவர்கள் “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியாராவேன். அவன்எனக்கு இன்ஜீலை வழங்கி என்னை அவனின் நபிமார்களில் ஒருவராகவும்ஆக்கியுள்ளான்” எனக் கூறினார்.

وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا

التاميلية | தமிழ்

“நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராகஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும் படியும், ஸகாத்தை வழங்கும் படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்”

وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا

التاميلية | தமிழ்

“என் தாய்க்கு நன்மை செய்யக்கூடியவனாக என்னை ஆக்கியுள்ளான். என்இறைவனுக்குக் கட்டுப்படாத கர்வம் கொண்டவனாக, அவனுடைய கட்டளைக்குமாறாகச் செயல்படக்கூடியவனாக அவன் என்னை ஆக்கவில்லை”.

وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا

التاميلية | தமிழ்

“நான் பிறந்த நாளிலும், மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுஎழுப்பப்படும் மறுமை நாளிலும் ஷைத்தானை விட்டும், அவனுடைய உதவியாளர்களைவிட்டும் என் இறைவன் என்னைப் பாதுகாத்துள்ளான். இந்த மூன்று கடினமானசூழ்நிலைகளிலும் ஷைத்தான் என்னைத் தீண்டவில்லை”.

ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ

التاميلية | தமிழ்

இப்பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர் தான் மர்யமின் மகன் ஈஸா ஆவார். இதுதான்அவருடைய விடயத்தில் உண்மையான தகவலாகும். அவருடைய விடயத்தில் சந்தேகம்கொண்டு, முரண்பட்டு, வழிகெட்டவர்கள் கூறும் விடயம் எதுவும் உண்மையற்றவை.

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

التاميلية | தமிழ்

மகனை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமற்றது. அவன் அதனைவிட்டும் தூய்மையானவன். அவன் ஏதேனும் ஒன்றை நாடினால், அவ்விடயத்தில் ‘ஆகு’என்று கூறி போதுமாக்கிக் கொள்வான். நிச்சயமாக அது ஆகிவிடும். அதில்சந்தேகமில்லை. அவ்வாறானவன் பிள்ளையை விட்டும் பரிசுத்தமானவன்.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [المائدة]

لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَايَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

التاميلية | தமிழ்

“அல்மஸீஹ்” எனப்படும் ‘மர்யமின் மகன் ஈஸா தான் இறைவன்’ என்று கூறியகிறிஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். தூதரே! அவர்களிடம் “ஈஸாவையும், அவருடைய அன்னையையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்கநாடிவிட்டால், யாரால் அதனைத் தடுக்க முடியும்? எனக் கேட்பீராக. அவனைத்தடுப்பதற்கு சக்தி பெறமாட்டார் என்றால் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன்வேறு யாருமில்லை, மர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும், பூமியிலுள்ளஅனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள் தாம் என்பதற்கான சான்றாகும். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம்அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடியதை படைக்கிறான், அவ்வாறு அவன்படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள். அவர் அல்லாஹ்வின்தூதரும் அடியாரும் ஆவார். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.

مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡكَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ

التاميلية | தமிழ்

மர்யமின் மகன் ஈஸா தூதர்களில் ஒரு தூதர் மாத்திரமே. அவர்கள் மரணித்ததுபோலவே இவரும் மரணிப்பவரே. அவரது தாய் மர்யம் அதிகமாக உண்மையுரைக்கும், உண்மைப்படுத்தும் பெண்மணியாக இருந்தார். இருவருக்கும் உணவுத் தேவைஇருப்பதனால், இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். உணவுத் தேவைஉள்ளவர்கள் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? தூதரே! ஏகத்துவத்தைஅறிவிக்கக்கூடிய, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கும்அவர்களின் எல்லை மீறல் தவறு என நிரூபிக்கக்கூடிய, அத்தாட்சிகளை எவ்வாறுதெளிவுபடுத்துகின்றோம் என்பதை கவனமாகப் பார்ப்பீராக, இருந்தும் அவர்கள் இந்தஅத்தாட்சிகளை மறுக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதைஅறிவிக்கக்கூடிய தெளிவான அத்தாட்சிகளை அவர்கள் கண்ட பின்னரும் எவ்வாறுஅவர்கள் சத்தியத்தை விட்டும் திருப்பப்படுகிறார்கள்? என்பதையும் கவனித்துப்பார்ப்பீராக.

إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَفِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِبِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡكَفَفۡتُ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ

التاميلية | தமிழ்

அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தைநினைவுகூர்வீராக: “மர்யமின் மகன் ஈஸாவே!, நான் உம்மை தந்தையின்றிபடைத்தபோது, உம் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக. உமதுதாய் மர்யம் (அலை) ஐ அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்தஅருளையும் நினைவுகூர்வீராக! ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கொண்டு நாம் உம்மைவலுப்படுத்தியபோது (நீர் கைக்குழந்தையாக இருந்த போது) மக்களை அல்லாஹ்வின்பக்கம் அழைத்து உரையாடினீர். மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கியதூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர். உமக்கு எழுதவும் மூஸாவுக்குஇறக்கிய தவ்ராத், உம்மீது இறக்கிய இன்ஜீல், மார்க்க சட்டங்களின்இரகசியங்களையும், பயன்களையும், நோக்கங்களையும் நான் உமக்குக் கற்பித்ததும்நான் உமக்களித்த அருட்கொடைகளே. மேலும் நாம் உமக்களித்த அருட்கொடைகளில்ஒன்று, நீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில்ஊதியதும் அது பறவையாயிற்று. நீர் பிறவிக் குருடனை குருட்டுத் தன்மையிலிருந்துகுணப்படுத்துகிறீர். தொழு நோயாளியையும் குணப்படுத்துகிறீர். அதனால் அவர்ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார். உயிர்ப்பிக்குமாறுஅல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர். இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும். நாம் உமக்கு அளித்தஅருட்கொடைகளில் ஒன்று, நீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, “ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்றுகூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோது, நாம்உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.

وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَمَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِينَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلۡغُيُوبِ

التاميلية | தமிழ்

மறுமை நாளில் மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸாவிடம், “மர்யமின் மகன்ஈஸாவே! “அல்லாஹ்வை விட்டுவிட்டு என்னையும் என் தாயையும்வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா?” எனஅல்லாஹ் கேட்பதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு ஈஸா தம் இறைவனின்தூய்மையை உறுதிப்படுத்தியவராக “சத்தியத்தைத் தவிர வேறு எதைக் கூறுவதற்கும்எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால், நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீமட்டுமே வெளிப்படையானதையும், மறைவானதையும் நன்கறிந்தவன்” எனக்கூறுவார்.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [النساء]

وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا

التاميلية | தமிழ்

அவர்கள் நிராகரித்ததனாலும், மர்யம் (அலை) அவர்கள் மீது அபாண்டமாக விபச்சாரக்குற்றச்சாட்டை சுமத்தியதனாலும் நாம் நம் கருணையிலிருந்து அவர்களைத்தூரமாக்கினோம்.

يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَاٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا

التاميلية | தமிழ்

தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் “உங்களின்மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈஸாவைக் குறித்து உண்மையைத் தவிரஎதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ்உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம்அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். “குன்” (ஆகிவிடு) என்பது தான்அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம்அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கை கொள்ளுங்கள். “கடவுள்கள் மூவர்” என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குஇவ்வுலகிலும், மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்குமனைவியோ, மகனோ எவருமில்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும்பூமியிலும் அவை இரண்டிற்கும் இடையிலுள்ளவை அவனுக்கே உரியன. வானங்கள்பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வேபோதுமானவனாவான்” என்று கூறுவீராக.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [آل عمران]

۞إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, வானவர்களை அவருக்குச்சிரம்பணியுமாறு செய்தான். நூஹைத் தேர்ந்தேடுத்து பூமியில் அனுப்பப்படும் முதல்தூதராக ஆக்கினான். இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அவரதுசந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான். இம்ரானின் குடும்பத்தினரையும்தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து, அவர்களதுகாலங்களில் வாழ்ந்த மக்களுக்கு மத்தியில் அவர்களை மேன்மைப்படுத்தினான்.

ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

التاميلية | தமிழ்

மேலே கூறப்பட்ட தூதர்களும், அவர்களின் வழியைப் பின்பற்றிய அவர்களின்சந்ததிகளும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதில், நற்செயல்கள் புரிவதில் ஒருவர்மற்றவரைச் சார்ந்தவர்கள் தாம். அவர்கள் நற்குணத்தையும், சிறப்புகளையும் ஒருவர்மற்றவரிடமிருந்து பெற்றார்கள். அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதைசெவியேற்கக்கூடியவன். அவர்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். அதனால்தான் அவர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான்.

إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

التاميلية | தமிழ்

தூதரே! மர்யம் (அலை) அவர்களின் தாயாகிய இம்ரானின் மனைவி “என் இறைவா! வேறு எதுவும் செய்யாது உனக்கும், உன் வீட்டிற்கும் பணிவிடை செய்வதற்காகவே என்வயிற்றிலுள்ள சிசுவை உனக்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன். எனவேஎன்னிடமிருந்து எனது இந்தச் செயலை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீபிரார்த்தனையைச் செவியேற்கக்கூடியவன், என் எண்ணத்தை நன்கறிந்தவன்” எனக்கூறியதை நினைவு கூர்வீராக.

فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّيسَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

التاميلية | தமிழ்

கர்ப்ப காலம் நிறைவடைந்தபோது, அவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள். (அவள் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்தாள்) அப்போது அவள் “என் இறைவா! நான் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே!” என்றாள். அவள் என்னகுழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எதிர்பார்த்தஆண் ஆற்றலிலும், தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல. “நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன். உன் அருளை விட்டும் விரட்டப்பட்டஷைத்தானிடமிருந்து நான் இக்குழந்தைக்கும், இக்குழந்தையின் சந்ததிகளுக்கும்உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَعِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ

التاميلية | தமிழ்

அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக்குழந்தையை நல்ல முறையில் வளரச் செய்தான். அவனது நல்லடியார்களின்உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச் செய்தான். மர்யமுக்கு ஸகரிய்யா(அலை) அவர்களை பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா (அலை) மர்யமின்வணக்கஸ்தலத்திற்குச் செல்லும் போதெல்லாம் அங்கு இலகுவாகக் கிடைத்ததூய்மையான உணவைக் காண்பார். அவளிடம் “மர்யமே இந்த உணவு உனக்குஎங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார், அதற்கு மர்யம் “இது அல்லாஹ்விடமிருந்துகிடைத்த உணவாகும். அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாகவழங்குகிறான்.“ எனக் கூறுவாள்.

وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَـٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

தூதரே! வானவர்கள் மர்யமிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “உம்முடைய நல்ல பண்புகளின் காரணமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்துகுறைகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்தியுள்ளான். உம் காலத்தில் வாழும்உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் அல்லாஹ் உம்மைச் சிறப்பித்துள்ளான்.

يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّـٰكِعِينَ

التاميلية | தமிழ்

மர்யமே! நீண்ட நேரம் நின்று தொழுவீராக, உம் இறைவனுக்காக சிரம்பணிவீராக, அவனைக் குனிந்து வணங்கும் நல்லடியார்களுடன் சேர்ந்து நீரும் குனிந்துவணங்குவீராக.

ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَلَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ

التاميلية | தமிழ்

தூதரே! மேலே கூறப்பட்ட ஸகரிய்யா மற்றும் மர்யமைப் பற்றிய செய்திகள் மறைவானசெய்திகளாகும். நாமே இவற்றை உமக்கு அறிவிக்கின்றோம். மர்யமை யார்பராமரிப்பது? என்ற விஷயத்தில் ஏற்பட்ட போட்டியால் அவர்களிலுள்ள அறிஞர்களும், நல்லவர்களும் சீட்டுக் குலுக்கி அவர்களது எழுதுகோல்களைப் போட்டபோது நீர்அவர்களுடன் இருக்கவில்லை. சீட்டு குலுக்கிப் போடப்பட்ட போது ஸகரிய்யாவின்எழுதுகோலே வென்றது.

إِذۡ قَالَتِ ٱلۡمَلَـٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِيٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ

التاميلية | தமிழ்

தூதரே! பின்வரும் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக: வானவர்கள் மர்யமிடம்“அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர்தந்தையின்றி, அல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’ ‘ஆகிவிடு’ என்பதைக் கொண்டுபடைக்கப்படுவார். அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம் ஆகும். அவர் இவ்வுலகிலும், மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார். அல்லாஹ்வுக்குநெருக்கமானவராக இருப்பார்” என்று கூறினார்கள்.

وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّـٰلِحِينَ

التاميلية | தமிழ்

பேசும் பருவத்தை அடையாத சிறு குழந்தையாக இருக்கும் போதே அவர் மக்களிடம்பேசுவார். முழுமையான பலத்தையும், ஆண்மையையும் பெற்று அவர் பெரியவரானபிறகும் மக்களிடம் பேசுவார். அவர்களின் உலக மற்றும் மார்க்க விஷயங்களில்நன்மையானவற்றை அவர்களுக்குக் கூறுவார். சொல்லிலும், செயலிலும்நல்லவராகவும் இருப்பார்.

قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَايَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

التاميلية | தமிழ்

கணவனின்றி தனக்குக் குழந்தை பிறப்பதை ஆச்சரியமாகக் கருதிய மர்யம் “எனக்குஎவ்வாறு குழந்தை பிறக்கும்? என்னை எந்த ஆணும் முறையாகவோ, தவறாகவோநெருங்கியதில்லையே?” எனக் கேட்டார். வானவர் “தந்தையின்றி உங்களுக்குகுழந்தையை அவன் தந்தது போன்றே, தான் ஏற்படுத்திய வழக்கத்திற்கு மாறாக தான்நாடியதைப் படைக்கிறான். அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ‘குன்’(ஆகிவிடு) என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். அவனை எதுவும்இயலாமலாக்காது” என்று கூறினார்.

وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ

التاميلية | தமிழ்

அவன் அவருக்கு எழுத்தையும், சொல்லிலும், செயலிலும் நேர்த்தியையும் கற்றுக்கொடுப்பான். மூஸா (அலை) அவர்களின் மீது இறக்கிய தவ்ராத்தையும், அவர் மீதுஇறக்கப்போகின்ற இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير Italiano سورة [التحريم]

وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦوَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ

الإيطالية | Italiano

E Allāh diede un esempio a coloro che credono in Allāh e nei suoi messaggeri con la storia di Maryem, figlia di Imrān, che preservò le sue intimità dall‘adulterio, e Allāh ordinò a Jibrīl di soffiare in esse, e così concepì Īsā ( عيسى) figlio di Maryem per decreto di Allāh, senza un padre, e si sottomise alle leggi di Allāh e ai Suoi Libri rivelati ai Suoi messaggeri, e fu una di coloro che obbediscono ad Allāh, seguendo i Suoi ordini e rispettando i Suoi divieti.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير Italiano سورة [المؤمنون]

وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ

الإيطالية | Italiano

E abbiamo reso Īsā ( عيسى), figlio di Maryem, e sua madre, Maryem, un Segno della Nostra Potenza: venne concepito senza padre e gli concedemmo rifugio in un alto ed esteso luogo della terra, ideale per abitarvi, in cui vi era acqua corrente e rinnovata.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير Italiano سورة [الأنبياء]

وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ

الإيطالية | Italiano

E rammenta, o Messaggero, della storia di Maryem, pace a lei, colei che protesse le sue intimità dall‘adulterio. Allāh le inviò Jibrīl جبريل , pace a lui, che soffiò in essa e divenne gravida di Isa, pace a lui; e lei e suo figlio Isa furono un Segno, rivolto alla gente, della Potenza di Allāh, e del fatto che, in verità, nulla Gli è impossibile, quando lo creò senza un padre.

التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير Italiano سورة [مريم]

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا

الإيطالية | Italiano

E rammenta – o Messaggero – nel Corano a te rivelato, la storia di Maryem, pace a lei, quando si allontanò dalla sua famiglia e si ritirò verso oriente.

فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا

الإيطالية | Italiano

Pose, tra di lei e il suo popolo, un divisorio, in modo che non la vedessero mentre pregava il Suo Dio. Così le inviammo Jibrīl, pace a lui, e prese la forma perfetta di un uomo, e lei temette che volesse farle del male.

قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا

الإيطالية | Italiano

E quando lo vide venire verso di lei nella forma perfetta di uomo, disse: “In verità, mi rifugio nel Compassionevole da qualsiasi male provenga da te, o tu, se sei devoto e temi Allāh“

قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا

الإيطالية | Italiano

Disse Jibrīl, pace a lui: “Io non sono un essere umano, in verità sono un messaggero del tuo Dio, che mi Ha inviato a te per annunciarti un figlio buono e puro“.

قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا

الإيطالية | Italiano

Maryem disse, meravigliata: “Come posso avere un figlio se non mi Ha toccato alcun marito, o altri, e non sono un‘adultera, così che possa nascermi un figlio?!“

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا

الإيطالية | Italiano

Jibrīl le disse: “Le cose stanno come dici, non ti Ha toccato alcun marito o altri, e non sei un‘adultera, e il Tuo Dio, gloria Sua, Ha detto: “La creazione di un figlio senza padre è cosa facile per me; e che il figlio che ti è stato donato sia un Segno, rivolto alla gente, che testimoni la Potenza di Allāh, e Misericordia, da parte Nostra, verso di te e tutti coloro che gli crederanno. La creazione di questo tuo figlio è un decreto stabilito dal tuo Dio, scritto nella Matrice del Libro“.

۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا

الإيطالية | Italiano

E lei divenne gravida dopo il soffio dell‘angelo, e così si allontanò in un luogo distante dalla gente.

فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا

الإيطالية | Italiano

Venne afflitta dalle doglie, che la indussero ad appoggiarsi al tronco di una palma. Maryem disse, pace a lei: “Se solo fossi morta prima di questo giorno e fossi una cosa priva di importanza, in modo che non pensino male di me!“

فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا

الإيطالية | Italiano

Così Īsā ( عيسى) la chiamò da sotto i suoi piedi: “Non ti affliggere, il tuo Dio Ha creato, sotto i tuoi piedi, un ruscello da cui abbeverarti“.

وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا

الإيطالية | Italiano

Prendi il tronco della palma e smuovilo: cadranno su di te datteri morbidi e freschi.

فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَٱلۡيَوۡمَ إِنسِيّٗا

الإيطالية | Italiano

Mangia i datteri e bevi l‘acqua, e rasserenati del tuo nascituro, e non rattristarti. Se vedi qualcuno e dovesse chiederti riguardo il nascituro, digli: “In verità, ho fatto un voto di silenzio al mio Dio. Oggi non parlerò con nessuno“

فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا

الإيطالية | Italiano

Maryem giunse al suo popolo portando suo figlio, e il suo popolo le disse, rimproverandola: “O Maryem, Hai commesso una nefandezza: Hai partorito un figlio senza un padre!“

يَـٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا

الإيطالية | Italiano

Tu che sei simile ad Hārūn nella devozione (era un uomo pio) e tuo padre non è un adultero, né tua madre è un‘adultera: appartieni a una famiglia pura, che è risaputo sia giusta, come puoi avere un figlio senza un padre?!

فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا

الإيطالية | Italiano

Indicò suo figlio Īsā ( عيسى), pace a lui, ed egli era un neonato. Le disse il suo popolo, sorpreso: Come possiamo parlare con un neonato?!

قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا

الإيطالية | Italiano

Īsā, pace a lui, disse: “In verità io sono suddito di Allāh; Egli mi Ha rivelato il Vangelo e mi Ha reso uno dei Suoi profeti,

وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا

الإيطالية | Italiano

e mi rese molto utile alla gente, ovunque io mi trovi, e mi ordinò di praticare la Preghiera ed elargire la Zakēt per tutta la durata della mia vita,

وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا

الإيطالية | Italiano

e mi rese benevolo verso mia madre, e non mi Ha reso superbo nell‘obbedire al mio Dio, né a Lui disobbediente,

وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا

الإيطالية | Italiano

e la protezione da Satana e dai suoi compagni mi Ha accompagnato nel giorno della mia nascita, e mi accompagnerà nel giorno della mia morte, e quando tornerò in vita, nel Giorno della Resurrezione; Satana non mi si avvicinerà in queste tre fasi buie.

ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ

الإيطالية | Italiano

Colui che possiede queste caratteristiche è Īsā ( عيسى) figlio di Maryem, e queste sono le caratteristiche che gli si addicono, non ciò che dicono gli sviati, coloro che sono incerti a suo riguardo e che disputano su ciò.

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

الإيطالية | Italiano

Non si addice ad Allāh prendere un figlio, lungi Egli da ciò, Lui è al di sopra di tutto questo. Quando desidera qualcosa, Gli è sufficiente, gloria Sua, dire: “Sii“, e quella si realizzerà senza alcun dubbio. Colui che possiede tali caratteristiche è lungi dall‘avere un figlio.